Thursday, July 2, 2020

இயேசு ஸ்வாமி, உமது வசனத்தின் - ஞானப்பாடல் : 8

இயேசு ஸ்வாமி, உமது வசனத்தின் - ஞானப்பாடல் : 8

1. இயேசுஸ்வாமி உமது
வசனத்தின் பாலைத் தேட
வந்தோம் எங்கள் மனது
மண்ணைவிட்டு உம்மைச்சேர
எங்கள் சிந்தையை நீர்முற்றும்
தெய்வ சொல்லுக்குட்படுத்தும்.

2. உமதாவி எங்களில்
அந்தகாரத்தை அறுத்து
ஒளியை வீசாராகில்
புத்தி கண்ணெல்லாம் இருட்டு
சீர் உண்டாக்கும் நற்சிந்திப்பு
உம்முடைய நடப்பிப்பு.

3. மகிமையின் ஜோதியே,
ஸ்வாமி, நாங்கள் மாயமற 
பாடிக்கெஞ்சி, நெஞ்சிலே
வசனத்தைக் கேட்டுணர,
வாய் செவி மனமுங் கண்ணும்
திறவுண்டு போகப்பண்ணும்


No comments:

Post a Comment

பாடி வேத போதனை - ஞானப்பாடல் : 12

பாடி வேத போதனை - ஞானப்பாடல் : 12 1. பாடி வேத போதனை கேட்டு ஜெபிக்க அன்பான கர்த்தர் இப்போ கிருபை செய்ததாலே நம்மை வான ஊணால் போஷித்ததற்...