Thursday, July 2, 2020

ஆ, இயேசுவே, நீர் எங்களை - ஞானப்பாடல் : 6

, இயேசுவே, நீர் எங்களை - ஞானப்பாடல் : 6

1. ஆ, இயேசுவே நீர் எங்களை
அன்பாய்ச் சேர்ந்துமதாவியை
அருள் அனுக்ரகத்தையும்
தந்தெங்கள் மேய்ப்பராயிரும்

2. பரத்தில் நாங்கள்; ஸ்வாமியே,
நீர் தூய, தூய, தூயரே
என்றோதி, உம்மை என்றைக்கும்
களிப்பாய்ப் பார்க்குமளவும்.

3. வாய் உம்மைப் போற்றி, மனது
தெய்வன்பை நன்றாய் யோசித்து
உணர்வும் விசுவாசமும்
பலக்கக் கட்டளையிடும்.

4. ஒன்றாக ஆண்டிருக்கிற
த்ரியேக தெய்வமாகிய
பிதா குமாரன் ஆவிக்கும்
தோத்திரமே உண்டாகவும்.


No comments:

Post a Comment

பாடி வேத போதனை - ஞானப்பாடல் : 12

பாடி வேத போதனை - ஞானப்பாடல் : 12 1. பாடி வேத போதனை கேட்டு ஜெபிக்க அன்பான கர்த்தர் இப்போ கிருபை செய்ததாலே நம்மை வான ஊணால் போஷித்ததற்...