கர்த்தாவின் திருநாளிதாம் (ஞானப்பாடல் : 3)
1. கர்த்தாவின் திருநள் இதாம்
விசாரம் வேலையை எல்லாம்
மறந்தவர்முன் யாவரும்
வந்தவரைப் பணியவும்.
அல்லேலூயா.
2. துவக்கத்தில் ஒன்றாகிலும்
இல்லாதபோது யாவையும்
உண்டாக்கின கர்த்தாவைப்போல்
யார் என்று போற்றிப் பாடுங்கள்
அல்லேலூயா.
3. புவியும் அதிலுள்ளதும்
படைத்து மனிதனையும்
தெய்வீகச் சாயலின்படிப்
படைத்தஸ்வாமிக்குத் துதி
அல்லேலூயா.
4. தினமும் நம்மைப் போஷித்து
அநேக விக்கினத்துக்கு
விலக்கிக் காத்து வந்தாரே,
அதவர் சுத்த பட்சமே.
அல்லேலூயா.
5. கெட்டோருக் கனுசாரமும்
ரட்சிப்பும் நித்ய பூரிப்பும்
கிடைக்க, இன்று ரட்சகர்
குழியை விட்டெழுந்தவர்.
அல்லேலூயா.
6. பிசாசின் அடிமைகளால்
சூழுண்டிவர்கள் மூர்க்கத்தால்
வதைந்து, சிலுவையிலே
மாண்டோரின் வெற்றி நாள் இதே.
அல்லேலூயா.
7. மகிமையாய் எழுந்தபின்
இந்நாளில் அவர் சீஷரின்
துக்கத்தைபோக்கி, திக்கில்லார்
இருதயத்தைத் தேற்றினார்.
அல்லேலூயா.
8. இந்நாளைக் கர்த்தரின் நாளாய்
மெய்யான ஓய்வு நாளுமாய்
நாம் ஆசரித்து, வரப்போம்
கதியை நோக்கக்கடவோம்.
அல்லேலூயா.
9. விஸ்தாரமான லோகத்தை
படைத்தஸ்வாமி, எங்களை
இந்நாள் வரையில் தேவரீர்
காப்பாற்றிக் கொண்டிருக்கிறீர்.
அல்லேலூயா.
10. அடியார் உமதாளுகை
இரக்கம் ஞானம் வல்லமை
பலம் மகத்துவத்தையும்
மென்மேல் அறிந்து போற்றவும்.
அல்லேலூயா.
11. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே,
நீர் எங்கள் ஆத்துமத்திலே
பிழைத்து, எந்த நன்மைக்கும்
அடியாரை உயிர்ப்பியும்.
அல்லேலூயா.
12. தேவாவியே, நல்லறிவும்
மெய்விசுவாசம் நேசமும்
சபையிலே உம்முடைய
நல் வார்த்தையாலே பெருக.
அல்லேலூயா.
13. வெளிச்சந் தந்தடியாரில்
அன்பாகத் தாங்கும்; எங்களில்
எல்லாம் கர்த்தாவின் மேன்மைக்கு
பலிக்கவே கடவது.
அல்லேலூயா.
No comments:
Post a Comment