Monday, June 29, 2020

மாசற்ற ஆட்டுக்குட்டி நீர் சிலுவையில் தொங்கி- ஞானப்பாடல் : 48

மாசற்ற ஆட்டுக் குட்டி, நீர் சிலுவையில்

1. மாசற்ற ஆட்டுக் குட்டி
நீர் சிலுவையில் தொங்கி,
கடன் யாவும் செலுத்தி
இரக்கத்தாலே பொங்கி
பொல்லாப்பைச் சாவால் வென்றீர்
பொல்லாருக்காகச் சென்றீர்.
அடியார் மேல் இரங்கும்.

2. மாசற்ற ஆட்டுக்குட்டி
நீர் சிலுவையில் தொங்கி,
கடன் யாவும் செலுத்தி,
இரக்கத்தாலே பொங்கி
பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்
பொல்லாருக்காகச் சென்றீர்.
அடியார் மேல் இரங்கும்.

 

3. மாசற்ற ஆட்டுக்குட்டி
நீர் சிலுவையில் தொங்கி,
கடன் யாவும் செலுத்தி,
இரக்கத்தாலே பொங்கி
பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்
பொல்லாருக்காகச் சென்றீர்
நீர் சமாதானந் தாரும்.

Sunday, June 28, 2020

உம்மை துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே- ஞானப்பாடல் : 2

1. உம்மைத் துதிக்கிறோம், யாவுக்கும் வல்ல பிதாவே,
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமி, ராஜாதி ராஜாவே,
உமது மா, மகிமைக்காக, கர்த்தா,
தோத்திரஞ் சொல்லுகிறோமே.

2. கிறிஸ்தே, இரங்கும் குமாரனே, கடன் செலுத்தி,
லோகத்தின் பாவத்தை நீக்கிடும் தேவாட்டுக்குட்டி,
எங்கள் மனு- கேளும்; பிதாவினது
ஆசனத்தோழா, இரங்கும்.

3. நித்திய பிதாவின் மகிமையில் இயேசுவே,
நீரே, பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே,
ஏகமாய் நீர்- அர்ச்சிக்கப்படுகிறீர்.
உன்னத கர்த்தரே. ஆமேன்.


புத்திக்கெட்டாத அன்பின் வாரீ- ஞானப்பாடல் : 339

1 புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும்,
உம் பாதம் அண்டினோமே, தேவரீர்
விவாகத்தால் இணைக்கும் இருபேரும்
ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்.

2 ஆ, ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்,
நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்
உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்,
குன்றாத தீரமும் தந்தருளும்.

3 பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி,
மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;
வாழ்நாளின் ஈற்றில் மோட்சக்கரையேற்றி
நிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர்.

தெய்வன்புக்காக உன்னத -ஞானப்பாடல் : 1

 

தெய்வன்புக்காக உன்னத
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி;
என் பாவக்கேட்டை நீக்கின
அது மகா திரட்சி
மெய்ச் சமாதானம் என்றைக்கும்
நரர்கள் மேல் பிரியமும்
உண்டாம் இரக்கம் பெற்றோம்.
 
 மாறாமல் ஆண்டிருக்கிற
மகத்துவப் பிதாவே,
துதியோடும்மைக் கும்பிடப்
பணிகிறோம் கர்த்தாவே.
அளவில்லாப் பலமாய் நீர்
நினைத்த யாவுஞ் செய்கிறீர்;
மா பாக்கியர் அடியார்.
 
ஆ, இயேசு, தெய்வமைந்தனே;
கடன்களைச் செலுத்தி
கெட்டோரை மீட்டமீட்பரே,
மாசற்ற ஆட்டுக்குட்டி,
மா கர்த்தரே, தயாபரா,
அடியார் சத்தம் கேட்டெல்லாச்
சபைக்கும் நீர் இரங்கும்.
 
மெய்யாகத் தேற்றும் உன்னத
தெய்வாவி, நீர் அன்பாக
இரங்கி, கிறிஸ்து தாமுற்ற
சாவால் பிரியமாக
மீட்டோரைச் சாத்தான் கண்ணியில்
விழாதே காத்து, துன்பத்தில்
ஜெயிக்கப்பண்ணும், ஆமேன்.


Saturday, June 27, 2020

பிரியமான இயேசுவே என் நெஞ்சைத் தயவாக - ஞானப்பாடல் : 138

1.பிரியமான இயேசுவே
என் நெஞ்சைத் தயவாக
நீர் பூரிப்பாக்கி என்னிலே
பலத்தத் தேற்றலாகத்
தெய்வீக அன்பை ஊற்றிய
படியினால் உம்முடைய
துதியைச் சொல்வேனாக.

2. என் நெஞ்சில் உம்மால் பற்றின
சிநேகத் தீ எரியும்
என் மனமும்மால் உத்தம
மகிழ்ச்சியை அறியும்.
நான் உம்மை நோக்கும் போதெல்லாம்
என் துக்கம் உம்மிலே உண்டாம்
அருளினால் தெளியும்.

3. நீர் என் வெளிச்சம் உம்மால் நான்
திறந்த முகமாக
பிதாவின் இன்ப நெஞ்சைத்தான்
என் ஆறுதலுக்காகக்
கண்ணோக்குவேன் மாதயவாய்
நீர் என்னை நீங்கா ஜோதியாய்
ப்ரகாசிப்பிப்பீராக.

4. நீர் மோட்சத்துக்குப்போம் வழி
இதற்குள்ளான யாரும்
தப்பாய்ப் போகான் இதே சரி
விலகினோ ரெல்லாரும்
அழிந்து போகிறார்களே
வழியாம்ஸ்வாமி உம்மிலே
நிலைக்க என்னைக் காகும்.

5. நீர் சத்தியம் நான் உம்மையே
தெரிந்து கொண்டிருப்பேன்;
பொருளுஞ் சாரமும் நீரே;
வீண் மாய்கையை வெறுப்பேன்
உம்மாலே பாக்கியம் வரும்.
மெய்யே என் நெஞ்சை என்றைக்கும்
நான் உமக்கே கொடுப்பேன்.

6. நீர் ஜீவன் என்னை நீர்,நீரே
தரும் பலம் ஏவட்டும்.
திடனில்லா அந்நேரமே
என் நெஞ்சை நீர் திடத்தும்
அப்போது வாழ்ந்து தேறுமே,
இத்தேவ ஜீவன் என்னிலே
மென்மேல் பலங் கொள்ளட்டும்.

7. நீர் வானத்தப்பம், பஞ்சத்தில்
பசி உம்மாலே ஆறும்.
நான் போம் வனாந்தரங்களில்
என் மனமும்மை நாடும்.
பிதாவின் ரூடவ்வாம் மன்னாவே,
நீர் என்னை வேறே இச்சைக்கே
விலக்கமாகக் காரும்.

8. நீர் ஜீவ ஊற்று, உம்மிலே
குடித்தால், தாகந் தீரும்.
நீர் தரும் ஈவு நித்தமே
சுரக்கிற தண்ணீரும்,
என்னை நிரப்பி அன்புடன்
கண்ணோக்கினால் உண்டாம் பலன்
ஆரோக்கியம் நற்சீரும்.

9. நீர் என்னை ஜோடிக்கும் உடை,
நீர் என் அலங்கரிப்பு,
நான் உம்முடைய நீதியை
அணிவதென் வாஞ்சிப்பு.
பூலோகத்தின் சிங்காரமாம்
வினோத சம்ப்ரமம் எல்லாம்
கனமில்லாதத் தரிப்பு.

10. நீர் நான் சுகித்துத் தங்கிடும்
அரண்மனையும் வீடும்;
புயல் அடித்தும் விருதா,
பேய் வீணாய் என்னைச் சீறும்;
நான் உம்மில் நிற்பேன், ஆகையால்
கெடேன்; பொல்லார் எழும்பினால்
நீர் என் வழக்கைத்தீரும்.

11. என் மேய்ப்பராயிருக்கிறீர்
என் மேய்ச்சலும் நீர்தாமே,
காணாமல் போன என்னை நீர்
மா அன்பாய் மீட்டோராமே.
இனி இவ்வாட்டை என்றைக்கும்
நீர் சிதற வொட்டாதேயும்,
நான் உம்முடையோனாமே.

12. நீர் என்றைக்கும் நான் வாஞ்சையாய்ப்
பணிந்து கொள்ளும் பத்தா;
நீர் என் ஆசாரியருமாய்ப்
பலியாய் மாண்ட கர்த்தா.
நீர் என்னை ஆளும் ராஜாவும்,
உம்மாலே எந்தப் போரிலும்
ஜெயிப்பேன், மா சமர்த்தர்.

13. நீர் உத்தம சிநேகிதர்,
என் நெஞ்சும்மண்டை சாயும்;
நீர் உண்மையாஞ் சகோதரர்,
நீர் என்னைப் பார்க்குந் தாயும்.
நீர் நோயில் பரிகாரியே,
உம்மாலே ஆறிப்போகுமே
என் காயமும் விடாயும்.

14. படையில் நீர் சேனாபதி,
வில் கேடயஞ் சீராவும்,
கருங்கடலில் நீர்வழி
காண்பிக்கும் வழிகாட்டி,
எழும்புங் கொந்தளிப்பிலே
நீர் என் நங்கூரம், இயேசுவே,
நான் உட்படங்குடாவும்.

15. நீர் ராவில் என் நட்சத்திரம்,
இருளில் என் தீவர்த்தி
குறைவில் என் செல்வங்களும்,
என் தாழ்வில் என் உயர்த்தி,
கசப்பிலே என் மதுரம்,
நான்தொய்ந்தால் மீண்டும் என் மனம்
பலக்க நீர் என் சக்தி.

16. நீர் ஜீவனின் விருட்சமும்,
நீர் செல்வங்கள் பொழியும்
பூங்காவனமும், என்றைக்கும்
சுகந்தருங் கனியும்;
முள்ளுள்ள பள்ளத்தாக்கிலே
என் ஆவிக்கு நீர், இயேசுவே
குளிர்ந்த பூஞ்செடியும்.

17. நீர் துக்கத்தில் என் ஆறுதல்
நீர் வாழ்வில் என் களிப்பு
நீர் வேலையில் என் அலுவல்,
பகலில் என் சிந்திப்பு
நீர் ராவில் என் அடைக்கலம்,
நீர் தூக்கத்தில் என் சொப்பனம்
விழிப்பில் என் குறிப்பு.

18. ஆ, ஒப்பில்லாத அழகே,
நான் எத்தனை சொன்னாலும்,
என் நாவினால் முடியாதே;
நான் என்ன வாஞ்சித்தாலும்,
அதெல்லாம் நீரே இயேசுவே;
மா தயவுள்ள நேசரே,
நீர் என்றும் என்னை ஆளும்.


பாடி வேத போதனை - ஞானப்பாடல் : 12

பாடி வேத போதனை - ஞானப்பாடல் : 12 1. பாடி வேத போதனை கேட்டு ஜெபிக்க அன்பான கர்த்தர் இப்போ கிருபை செய்ததாலே நம்மை வான ஊணால் போஷித்ததற்...