Friday, July 10, 2020

பாடி வேத போதனை - ஞானப்பாடல் : 12

பாடி வேத போதனை -

ஞானப்பாடல் : 12

1. பாடி வேத போதனை
கேட்டு ஜெபிக்க அன்பான
கர்த்தர் இப்போ கிருபை
செய்ததாலே நம்மை வான
ஊணால் போஷித்ததற்காக
அவரைத் துதிப்போமாக.

2. ஆசீர்வாதம் நமது
மீதில் கூறப்பட்டதாலே
களிப்பாக வீட்டுக்குச்
சென்று, தேவ ஆவியாலே
துணை பெற்று பக்தியாக
நாம் நடந்துகொள்வோமாக.

3.ஸ்வாமி எங்கள் போக்குக்கு
வரத்துக்கும் சித்தி தந்து,
ஊண் உழைப்போடோய்வையும்
நீர் ஆசீர்வதித்து வந்து,
நல் முடிவைத் தந்து காரும;
மோட்சத்தில் ப்ரவேசம் தாரும்.


கர்த்தரே, காப்பாற்றும், ஆசீர்வாதம் தாரும் - ஞானப்பாடல் : 11

கர்த்தரே, காப்பாற்றும், ஆசீர்வாதம் தாரும்

ஞானப்பாடல் : 11


1. கர்த்தரே காப்பாற்றும்
ஆசீர்வாதம் தாரும்
எங்கள் மேல் உம்முகத்தை
வைத்து, வீசும் ஒளியை.


2. எங்களுக்கன்றன்று
சமாதானம் தந்து
கிறிஸ்தைக் காட்டிப் போதிக்கும்
உமதாவியைப் கொடும்.


3. எங்கள் மீட்பரான
இயேசுவின் மேலான
நாமத்துக்கு மகிமை
ஆமேன், கேட்பீர் ஜெபத்தை.


நான் என்றும் உன்மையுற்ற-ஞானப்பாடல் : 10

நான் என்றும் உன்மையுற்ற
ஞானப்பாடல் : 10

நான் என்றும் உன்மையுற்ற
ஸ்வாமி உம்மிடத்தில்
விடாமல் நிலை நிற்க
மெய் உபதேசத்தில்
நீரென்னைக் காத்திரங்கும், 
நிலைவரங்கொடும்
இவ்வன்புக்கிங்கும் அங்கும்
நான் உம்மை போற்றவும்.

இயேசு ஸ்வாமியே, நீர் சொல்லும் - ஞானப்பாடல் : 9

இயேசு ஸ்வாமியே, நீர் சொல்லும் 
 ஞானப்பாடல் : 9

1. இயேசு ஸ்வாமியே நீர் சொல்லும்
நானோ கவனிக்கிறேன்.
நீர் உரைக்கக் கேட்டுக் கொள்ளும்
வசனத்தை அடியேன்
நல் இருதயத்திலே
ஏற்றுக் கொண்டுமக்கென்றே
நான் பிழைக்கிறதற்காக
பலத்தை அளிப்பீராக.

2.
நேசரே, நீர் போதிவிக்கும்
மொழி யாவும் எனக்கு
ரட்சிப்புக்கென்றே பலிக்கும்,
அத்தால் துக்கம் நீங்கிற்று,
அதொப்பற்ற பொக்கிஷம்,
தேனிலேயும் மதுரம்
அதை நான் சந்தோஷமாகக்
கேட்டுக் கவனிப்பேனாக.

3.
பேயால் நான் நெருக்கமான
வழியில் கலங்கவே,
இந்தக் கோல் அல்லோ மெய்யான
திடனைக் கொடுக்குமே.
அதில் ஊன்றி அடியேன்
சிலுவை சுமக்கிறேன்.
சாவில் தெய்வசொல் ஜெயிக்கும்
பலத்தை எனக்களிக்கும்.

4.
உமதுபதேசத்தாலே
என்றும் இளைப்பாறுவேன்,
அதை நான் மா வாஞ்சையாலே
நெஞ்சில் வைத்துக் காக்கிறேன்;
உம்மை அங்கே நேரிலே
கேட்கும் மட்டும், இயேசுவே,
அதை என்றைக்கும் அன்பாக
என்னிடத்தில் காப்பீராக.

5.
என் ஜெபத்தைக் கவனியும்
நேசமுள்ள இயேசுவே
நிலை நிற்க ஈவளியும்
அப்போதும்மை நித்தமே
எந்த நிமிஷத்திலும்
வாய் இதயத்தாலேயும்
தாழ்மையாக நான் துதிப்பேன்.
போற்றிப் பாடித் தோத்தரிப்பேன்.

Saturday, July 4, 2020

நான் உம்மை முழு மனத்தாலும் சிநேகிப்பேன் - ஞானப்பாடல் - 147

நான் உம்மை முழு மனத்தாலும் சிநேகிப்பேன்

ஞானப்பாடல் - 147

1. நான் உம்மை முழு மனத்தாலும்
சிநேகிப்பேன் என் இயேசுவே;
நான் உம்மை நித்தம் வாஞ்சையாலே
பின் செல்லுவேன் என் ஜீவனே;
குலை துடிக்குமட்டும் நீர்
என் நெஞ்சில் தங்குவீர்.

2. நான் உம்மை நேசிப்பேன், நீர் தாமே
என் உத்தமசிநேகிதர்;
நீர் தேவ ஆட்டுக்குட்டியாமே.
நீர் என் பத்தாவுமானவர்.
நான் என்றும் உம்மை நேசிப்பேன்,
தினமும் போற்றுவேன்.

3. ஆ, அழகே, என் மீட்புக்காக
உதித்த தேவ மைந்தனே,
நான் உம்மை இத்தனை நாளாக
அறிந்ததில்லை என்பதே,
இப்போதென் முழு மனத்தை
வருத்தும் வேதனை.

4. நான் உம்மைத்தேட வாஞ்சையற்று,
கண்கெட்டோனாய் சிதறினேன்
நாம் உம்மைவிட்டுத் தூரப்பட்டு
இவ்வுலகத்தை நேசித்தேன்;
இப்போ நான் உம்மைச் சேர்ந்தது
நீர் செய்த தயவு.

5. நீர் என்னை தெய்வஜோதியாலே
ப்ரகாசிப்பித்தடியேனைக்
குணப்படுத்திப் பூரிப்பாலே
நிரப்பி, என் மேல் தயவை
விரித்தீர், அதன் நிமித்தம்
உமக்குத் தோத்திரம்.

6. இனி நான் சிதறிப்போகாமல்
நேராக போய் சன்மார்க்கமாய்
என் கால்களாலே இடறாமல்
நடக்க நீர் ஒத்தாசையாய்
இருந்து, என்னை முழுதும்
திருப்பியருளும்.

7. என் கண்கள் இன்பமாய்க் கண்ணீரை
உதிர்க்கவும், எந்நேரமும்
என் மனவாஞ்சை தேவரீரைச்
சிநேகத்தாலே தாவவும்,
நீர் என்னை அன்பாய் நித்தமே
எழுப்பும், இயேசுவே.

8. நான் உம்மை ஜீவனுள்ள நாளும்
சிநேகிப்பேன், என் கர்த்தரே;
நான் உம்மை, அவதி வந்தாலும்
சிநேகிப்பேன், என் இயேசுவே
குலை துடிக்குமட்டும் நீர்
என் நெஞ்சில் தங்குவீர்.



பாடி வேத போதனை - ஞானப்பாடல் : 12

பாடி வேத போதனை - ஞானப்பாடல் : 12 1. பாடி வேத போதனை கேட்டு ஜெபிக்க அன்பான கர்த்தர் இப்போ கிருபை செய்ததாலே நம்மை வான ஊணால் போஷித்ததற்...